தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விஷேட அறிவிப்பு

வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

31.01.2007க்கு முன் பிறந்த பிரஜைகள் , வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று தங்களின் விபரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.