சட்டத்தரணி தாஹாவுக்கு ஜனாஸா தொழுகை; ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு I

காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன் உட்பட பெரும் எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பள்ளிவாசல் தலைவர் நினைவுரையை நிகழ்த்தியதுடன் கல்முனை ஜம்மியத்துல் உலமா தலைவர் ஜனாஸா தொழுகையையும் பள்ளிவாசல் இமாம் துஆப் பிரார்த்தனையும் நடாத்தி வைத்தனர்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர் நன்றியுரை நிகழ்த்தினார்.

கிழக்கின் முதுபெரும் வழக்கறிஞரும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்கள் வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் காலமானதுடன் அன்னாரது ஜனாஸா ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.