விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்..! மீட்க முற்பட்டவர்கள் கைது

வாகரை வெருகல் பாலத்திற்கு அருகில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 38 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் வாகரை , திருகோணமலை வத்தேகம நுகவெல மற்றும் குன்னேப்பான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 

மேலதிக விசாரணை

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்..! மீட்க முற்பட்டவர்கள் கைது | Ltte Gold Miners Arrested

குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக வாகரை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.