இந்தியப் பெருங்கடலில் ‘யுவான் வாங் 6’ கப்பல்! இம்முறை இலங்கைக்கு வருமா?

கடந்த ஓகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 (YW5) இன் சகோதர கப்பலான யுவான் வாங் 6 (YW6) இந்தோனேசியாவின் லோம்போக் ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் (HIP) சீன அரசுக்கு சொந்தமான கப்பலை நிறுத்த அனுமதிப்பது குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது, இதன் காரணமாக, ஒரு இராஜதந்திர மோதல் உருவானது.

Open Intelligence ஆய்வாளர்கள் மற்றும் MarineTraffic வரைபடங்களின்படி, யுவான் வாங் 6 நேற்று (5) மாலை இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

யுவான் வாங் 6 இந்தியப் பெருங்கடலுக்குள் செல்வது இது முதல் முறையல்ல. இந்த கப்பல் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு இந்தியப் பெருங்கடலில் நங்கூரமிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கப்பல் குறித்து இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யுவான் வாங் 6 கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதை இந்தியாவோ அல்லது இலங்கையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.