5.7 மில்லியன் இலங்கையர்களின் நிலை கவலைக்கிடம்! சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், கட்டமைப்பு ரீதியிலும் சேவை வழங்கலிலும் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவை சீரமைப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் மேற்குறிப்பிட்ட தொகை மேலும் அதிகரிப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் மேலும் மோசமடையும் எனவும் எச்சரித்துள்ளது.

தீவிர பொருளாதார நெருக்கடி

5.7 மில்லியன் இலங்கையர்களின் நிலை கவலைக்கிடம்! சர்வதேச அமைப்பு எச்சரிக்கை | The Condition Of Sri Lankans Is Worrying

 

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு எச்சரித்துள்ளது.

11 மாவட்டங்களில் நேரடி ஆய்வு

 

இந்த ஆய்வறிக்கையானது நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 871 குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட கருத்தறியும் ஆய்வில் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஆய்வில் நுவரெலியா மாவட்டத்தில் 10 கிராமங்களிலுள்ள 300 குடும்பங்களிடம் பிரத்யேகமாக நடத்தப்பட்ட ஆய்வுகள், 24 குழு ரீதியான கலந்துரையாடல்கள், தகவல் வழங்குனர்கள் 15 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏனைய தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

5.7 மில்லியன் இலங்கையர்களின் நிலை கவலைக்கிடம்! சர்வதேச அமைப்பு எச்சரிக்கை | The Condition Of Sri Lankans Is Worrying

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.