கூட்டமைப்பின் முகவரே ஹூல்! – மஹிந்த அணி குற்றச்சாட்டு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் செயற்படுகிறார்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐவரை நியமிக்கமுடியும். ஆனால், மூவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மூவர் கூடினால் மட்டுமே கூட்ட நடப்பெண் (கோரம்) இருக்கும். எனவேதான், ஏதேனும் தீர்மானம் எடுப்பதாக இருந்தால் ஹூலையும் கட்டாயம் அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ரட்ணஜீவன் ஹூலே வேட்புமனு தொடர்பான சர்ச்சையை எழுப்பியிருக்கக்கூடும் என்று நான் நம்புகின்றேன். இதனையடுத்தே சட்டமா அதிபரிடம் விளக்கம் கோர வேண்டிய தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு ஏற்பட்டிருக்கும்.

தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இவரைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாகவே கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அவர் முன்னெடுத்து வருகின்றார். 52 நாட்கள் அரசியல் நெருக்கடியின்போதே அவரின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்தது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.