கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதம்…

 எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதமாக்கியுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு(10)கந்தளாய் சீனிஆலைக்கு சொந்தமான கட்டிடங்களை காட்டு யானைகள் இவ்வாறு உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும், இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யானை வேலிகள் அமைக்கப்பட்டும் அதனைக் கடந்து சென்று இவ்வாறு சீனி ஆலைக்குரிய கட்டிடங்களை இடித்துள்ளதாகவும் பொலிஸாரும்,சீனி ஆலை தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று சுற்று மதிலையும் காட்டு யானைக் கூட்டங்கள் இடித்து தள்ளியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரமும்  இப்பகுதியில் அமைந்துள்ள மூன்று வீடுகளை காட்டு யானைகள் சேதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
சீனித் தொழிற்சாலைக்குரிய வளங்கள் பாவனைகள்  இன்றி பற்றைக்காடுகளாகி தூர்ந்து போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.