தபால் மூல வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிப்பு
தபால் மூலமாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தக்கூடிய உத்தியோகத்தர்கள் மூலமாக மாவட்ட செயலாளர் காரியாலயத்திலும் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலமாக வாக்களிப்பவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை தங்களது வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பரவலையடுத்து நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இவ்வாறு காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை