ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர்.

குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அவ்விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார  ஆகியோர் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு, 11 இளைஞர்கள் காணாமல் போன  விவகாரத்தில் போலி சாட்சிகளை உருவாக்கி, தனக்கு எதிராக  மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறியே  டீ.கே.பி. தசநாயக்கவால் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட 6 பேரை விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.