நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். மாநகர பதில் முதல்வர் து. ஈசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நயினாதீவு, மடு தேவாலய திருவிழாக்களில் அதிகபட்சம் 300 பக்தர்களை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அதற்கமைய நல்லூர் ஆலய வளாகத்திலும் 300 பக்தர்களையேனும் பங்கேற்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை