திருகோணமலை மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன்

திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 283 பேருக்கு இன்று வரைக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 132  பேருக்கும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 பேருக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பொத்துவில், கல்முனை தெற்கு போன்ற பகுதிகளில் 76 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும்  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன்  தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன்று வரைக்கும் 46 கொரோனா தொற்றாளர்கள் இணங் காணப்பட்டுள்ளதாகவும, மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பேரும், கல்முனையில் 09 பேரும்  இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் காத்தான்குடி தள வைத்தியசாலையில் 180 பேரும், கரடியனாறு ஒருநாள் சிகிச்சை நிலையத்தில் 87 பேரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையின் 92 பேரும் பதியதலாவ வைத்தியசாலையில் 65 பேரும் பாலமுனை வைத்தியசாலையில் 71 பேரும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் ஐந்திலும் 495 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பேலியகொடை மீன் சந்தையுடன் இரண்டாம் நிலையான சந்தேகத்துக்குரிய வர்களுடன் நேரடி தொடர்பு பட்டவர்கள் 340 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகமும் அவர் தெரிவித்தார்.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.