மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு கிடைத்து நாட்டு மக்களின் அதிஷ்டம் – ஊவா மாகாண ஆளுநர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வொன்று நடைபெற்றது.

 

இந்த போது உரையாற்றிய ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில்:

 

‘மகிந்த  ராஜபக்ச இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர், அனைத்து மதங்களையும் மதிப்பவர், அவர் போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு கிடைத்து இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம், மென்மேலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திப்போம்’ எனத் தெரிவித்தார்.

 

சர்வமத நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த சமய நிகழ்வில் பதுளை முதியங்கான ரஜமகா விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரர், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்கள், ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் வீரசிக, பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிரி,  ஊவா மாகாண பிரதான செயலாளர் P.டீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

 

(க.கிஷாந்தன்)

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.