கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றி

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. 20201ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று வியாளக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் 9.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார். தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்றது.

விவாதத்தினை தொடர்ந்து குழுநிலை கலந்துரையாடலிற்காக 15 நிமிடங்கள் சபை ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏகமனதான நிறைவேற்றத்திற்கான அறிவிப்பை தவிசாளர் சபையில் விடுத்தார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் ஆட்சேபனை தெரிவித்தார். தொடர்ந்து வாக்கெடுப்பிற்காக தவிசாளர் பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைத்தார்.
இதன் போது  வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் கிடைத்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் சபையில் கலந்து கொண்டிருக்கவில்லை.35 பேர் கொண்ட சபையில் இன்று 33 பேரே பங்குபற்றினர்.

ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக சுயேட்சைக்குழு உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 13 பேர் வாக்களித்தனர்.
வாக்களிப்பில் 7 மேலதிக வாக்குகளால் பாதீடு வெற்றி பெற்றது என சபையின் செயலாளர் அறிவித்ததை தொடர்ந்து, வாக்களித்த அனைவருக்கும், சபைக்கு சமூகமளிக்காத உறுப்பினர்கள் இருவருக்கும் தவிசாளர் நன்றி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.