மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் –

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் கடவத்தை நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

கடவத்தை நகரில் இன்று முற்பகலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பி.சி.ஆர் பரிசோதனையை கேட்ட கைதிகளுக்கு தோட்டாவில் அரசு பதில், பிசிஆர் பரிசோதனை புதிய முறையை அரசாங்கம் சிறையில் ஆரம்பித்தது, சேர் தோல்வி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.