கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு!

ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனாதொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த கடைகள் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு புடவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.