கல்விக்கு கை கொடுப்போம் மாணவர்களுக்கு உதவிக்கரம் !

தென்ராட்சி சேவை நிறுவனத்தின் (கனடா) தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி,ஆயுட் கால ஆலோசகரும் சமூக சேவையாளருமான வி.சு.துரைராஜா, சிரேஷ்ட உபதலைவரும் தொழில் அதிபருமான தேவதாஸ் சண்முகலிங்கம், சர்வதேச இணைப்பாளரும் நிறுவுனருமான இராசரட்ணம் சத்தியசீலன் ஆகியோரின் அனுசரணையுடன் தென்மராட்சி சேவை நிறுவனத்துடன் (கனடா) அறவழி போராட்டக்குழு இணைந்து நடாத்தும் பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பின்தங்கிய தென்மராட்சி பாடசாலையில் கல்வி பயிலும் (க.பொ.த.உயர்தரம் 2021) மாணவர்களுக்கு உதவும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 19/12/2020 சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கைதடி நுணாவிலில் அமைந்துள்ள அறவழி பணிமனையில் அறவழி போராட்டக்குழு தலைவர் வி.ஜீ.தங்கவேல் தலைமையில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி எஸ்.உஷா மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2021 இல் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மாணவர்கள் 65 பேருக்கு மாதாந்தம் ரூபா 2000 வீதம் பரீட்சை வரை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.