வவுனியாவில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பட்டானிச்சூர் கிராமம் முடக்கம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் கிராமம் சுகாதார பிரிவினால் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தின் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களை தனிமைப்படுத்தி பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை வவுனியா சுகாதார பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் அவர்களது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கிய பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் ஒழுங்ககைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி, குள வீதி, பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விசாரணைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
கருத்துக்களேதுமில்லை