கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு
கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2021ஆம் ஆண்டுக்கான
புதிய நிர்வாக தெரிவு கல்முனை பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவை அதிகாரி எ.எல்.எம்.அஸீம் தலைமையில்
பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிற்பகல் நேற்று ( 29) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.முபாறக் அலி, பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான்,அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி, கல்முனை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ், கல்முனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம்.அஸ்கி மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக, ஆர்.எம்.ஜெஸார்,
உபதலைவராக, எ.எல்.எம்அஸ்கி, செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை அதிகாரி
உப செயலாளராக, எஸ்.எம்.ஆதில், பொருளாளராக, எம்.எம்.வாஜித்,அமைப்பாளராக, ஜ.எம்.ஜாத் இஸ்மாயில், உப அமைப்பாளராக, ஏ.பி.சிம்சாட், ஊடக மற்றும் தகவல் பிரிவு இணைப்பாளராக எம்.என்.எம்.அப்றாஸ் மற்றும் துறைசார் பிரிவு செயற்பாட்டு உறுப்பினர் 21 பேர் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
இதன் போது பிரதேசதத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள், சம்மேளனத்தின் பழைய நிருவாக அங்கத்துவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
சம்மேளனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் இளைஞர்களுக்கும்
அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. முபாரக் அலி விளக்கமளித்தார்.
கருத்துக்களேதுமில்லை