அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – கலையரசன்!..

அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – கலையரசன்!…அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்று முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் வைத்து இந்த கருத்தினை தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்.

வடகிழக்கு பிரதேசங்களில் பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணியில் பல மத தலைவர்கள் , அரசியல் தலைவர்கள் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் , சிவில் அமைப்புக்கள் ,எமது வடகிழக்கு தாயக பிரதேசங்களில் தொடராக தமிழ் சமூகத்திற்கு எதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக பேரெழுச்சியாக இருக்கின்றது.

70 வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு பிரதேசங்களில் எமது மக்கள் பெரும்பான்பான்மை சமூத்தின் கீழ் அடிமையாக தொடர்ச்சியாக ஆழும் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றதன் காரணமாக அரசின் அநீதிகளுக்கு எதிராக இந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி இடம்பெற்றது வருகின்றனர்.

இந்த பேரணி இலங்கை அரசுக்கு மாத்திரமல்ல சர்வதேசத்திற்கும் இந்த சிறுபான்மை சமூகம் எதிகொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் எழுர்ச்சியாக பார்க்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்த கையோடு தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வினையும் வழங்காது எமது பிரதேசத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கோடு
அரசு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.