அருவி பெண்கள் வலையமைப்பினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிற்கு உதவிகள்!

கடந்த 9 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் மேம்பாடு தொடர்பாகவும் அவர்களது குடும்ப வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது தொடர்பான செயற்பாடுகளில் அருவி பெண்கள் வலையமைப்பு ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பகுதியில் காணப்படும் சுவாமி ஆத்மகநாநந்தா  வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் ஒன்று மற்றும் இரண்டில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 35 மாணவர்களுக்கான சீருடைமற்றும் பாதணிகள் அருவி பெண்கள் வலையமைப்பினால்  வழங்கி வைக்கப்பட்டது
அதனைத்தொடர்ந்து கரடியன்குளம் கிராமத்தில் வாழும் 49 குடும்பங்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டதோடு சிறு பெண்கள் குழுவும் அமைக்கப்பட்டது இக் குழுவினூடாக கிராடத்தில் பெண்களின் தேவை மற்றும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராவூர்பற்று சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி ஸ்ரீநாத் ஏராவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.ஜெயக்குமணன் கரடியனாறு மகா வித்தியால அதிபர் ராசையா செந்தில்நாதன் கரடியனாறு பொலிஸ் பிரதி பொறுப்பதிகாரி புஸ்பகுமார அருவி பெண்கள் வலையமைப்பின் ஊழியர்கள் கரடியன்குளம் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கரடியன்குளம் கிராம அபிவிருத்திசங்க தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் மயூரி ஜனன் கருத்து தெரிவிக்கையில்…………
இந்த கரடியன்குளம் கிராமத்திற்கு பொதுப்போக்குவரத்து வசதி இல்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது காரணம் இங்கு இருந்து மாணவர்கள் பாடசாலை செல்வதாயின் நடந்தும் உழவு இயந்திரங்களிலும் பட்டா வாகனங்களிலுமே செல்கின்றார்கள் இதனால் மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றார்கள்.இதன் விளைவாக கற்றல் நடவடிக்கையினை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க முடியாமல் பாடசாலை இடைவிழகல்கள் அதிகம் ஏற்படுகின்றது அத்தோடு இந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு  உரிய வசதிகளுடன் கூடிய பாடசாலைக் கட்டிடம் இன்மையால் தற்காலிகமாக மீனவர் கட்டிடத்திலே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
28 Attachments

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.