சம்மாந்துறை பிரதேச சமூர்த்தி வங்கிகள் ஒன்லைன் நடைமுறைகள் ஆரம்பித்து வைப்பு

(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம்)

அரச திணைக்களங்கள் நாட்டு மக்களுக்கான சேவையினை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்க வேண்டும் எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் சமூர்த்தி திணைக்களம் சமூர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்தல் ஊடாக ஒன்லைன் நடைமுறைகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில் அம்பாரை மாவட்டத்திலும் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள ஹிஜ்ரா சமூர்த்தி வங்கியின் சேவைகள் கணனி மயப்படுத்தல் ஊடாக ஒன்லைன் நடைமுறைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமூர்த்தி பதில் பணிப்பாளருமான வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வங்கிகளின் ஒன்லைன் நடைமுறைகள் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந் நிகழ்வுகளில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், சம்மாந்துறை பிரதேச செயலக் கணக்காளர் ஐ.எம் பாரிஸ், சமூர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.