இந்தியா- இலங்கை இணைந்து மெகா இராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் 8ஆவது கட்ட மெகா இராணுவ பயிற்சி, இலங்கையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 15 ஆம் திகதி வரை 12 நாட்கள் நாட்கள் நடைபெற இருக்கின்றன.

இரு நாட்டு இராணுவங்களின் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சி நடைபெறுவதாக இராணுவ அமைச்சகம்  குறிப்பிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும்  இரு இராணுவத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும் எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவத்துடன் இணைந்து, இந்திய இராணுவத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த 120 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்