இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார கற்கைகள் நிறுவகத்தின், சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தினூடாக பயிற்சி நெறிகள் விஜயதசமியில் ஆரம்பம்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின், சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தினூடாக வழங்கும் பயிற்சி நெறிகள் விஜயதசமி தினமாகிய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 15.10.2021 காரைதீவில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது
இந்நிகழ்வில்
பண்ணிசை, யோகாசனம்,கதாப்பிரசங்கம், வீணை, வயலின், மிருதங்கம், நடனம் போன்ற அடிப்படைச் சான்றிதழ்ப் பயிற்சிகளிற்கு வித்தியாரம்பம் இடம்பெற்றதுடன்
இந்நிகழ்வானது காரைதீவு பிரதேசசெயலாளர் திரு சி.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே.ஜெகதீசன் கலந்து கொண்டதுடன் வாழ்த்துச்செய்தியினை இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு .அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் இணையவழியினுாடாக ஆற்றியிருந்தார் இதில் சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் திரு வெ.ஜெயநாதன், காரைதீவ பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ திரு கி .ஜெயசிறில்,அறங்காவலர் ஒன்றியத்தின் தலைவர் இரா.குணசிங்கம், பணிமன்ற முன்னாள் தலைவர் திரு.வி.ரி. சகாதேவராஜா,அறங்காவலர் ஒன்றிய செயலாளர் திரு எஸ்.நந்தேஸ்வரன், வளவாளர்களாக முனைவர் நிஜந்தராகினி திருக்குமார், திருமதி புவனேஸ்வரி ஜெயக்கணேஸ், சைவப்புலவர் திரு யோகராஜா கஜேந்திரா ,செல்வி ஜேசுதாஸ் ஜினித்தா,திரு எஸ்.கோகுலராமன்,செல்வன் ஜெ.குனேக்காந் ,செல்வி ஜெயகோபன் தட்சாயினி கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் மன்றஉறுப்பினர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.