வேளாங்கண்ணியிலிருந்து நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயன்ற இலங்கைத் தமிழ் அகதிகள் கைது

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இருந்து நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயன்றதாக 9 ஈழத்தமிழர்களை கியூ பிரிவு காவல்துறையினர் அண்மையில் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய அகதிகள்: இலங்கை, ஆப்கான் உள்ளிட்ட பல நாட்டு அகதிகள் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கடந்த மார்ச் 6ம் தேதி நடந்த இப்போராடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள், ஆப்கானிஸ்தான், பிஜி, ஈராக், மலேசிய-இந்திய பின்னணிக் கொண்ட பல நாட்டு அகதிகள் ...

மேலும்..

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் போராட்டம்

(அந்துவன்) வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அதிகம் அங்கம் வகிக்கும் அமைப்பான ப்ரொடெக்ட் .அமைப்பின் ஆல் குறித்த பேரணி ...

மேலும்..

அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இராகலையில் போராட்டம்

அந்துவன்) பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா - இராகலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி ...

மேலும்..

பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பாரிய ஆரப்பாட்டம்

(அந்துவன்) பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்பு கொடிகளை ...

மேலும்..

நியூசிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தினேஷ் சந்திமால் 42 ...

மேலும்..

சபீஸை இடைநிறுத்திய அதாஉல்லாஹ் : அதாவுல்லாஹ்வுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்கிறார் சபீஸ்.

மாளிகைக்காடு நிருபர் தேசிய காங்கிரஸின் ஸ்தாபக கால உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய இணைப்பாளருமான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸை  தேசிய காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தி அக்கட்சியின் செயலாளரும். பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட அக்கரைப்பற்று ...

மேலும்..

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” : பெண்களுக்கு சமையல் கலை செயன்முறையும், பிரசவ கூடைகள் வழங்கி வைப்பும் !

நூருல் ஹுதா உமர் சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு “அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளின் கீழ் 112 ஆவது சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாவின் ஒருங்கிணைப்பில் கீழ் நிந்தவூர் பிரதேச செயலாளர் ...

மேலும்..

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா வழங்கிய பரிசு!

இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த பாடப்புத்தகங்களில் பாதியை அச்சிட முடிந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த ஆண்டு, ...

மேலும்..

யாழ். சாவகச்சேரி “பாரதி பாலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா

யாழ். சாவகச்சேரி "பாரதி பாலர் முன்பள்ளி"யின் வருடாந்த விளையாட்டு விழா முன்பள்ளி வளாகத்தில் நேற்று (11) இடம்பெற்றது. முன்பள்ளியின் முகாமைத்துவ தலைவர் சு.டினேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஊடகவியலாளரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற ...

மேலும்..

சட்டவிரோதமாக வீடொன்றை உடைத்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது!

சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சாவகச்சேரி நகரில் நேற்று (11) இடம் பெற்றுள்ளது. JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த வீடு உடைக்கப்பட்டுள்ளது. காணி உரிமைப் பிரச்சினையே சம்பவத்திற்கான காரணம் என ...

மேலும்..

மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் டிப்பர் வாகனத்துடன் கைது!

அனுமதிப் பத்திரம் இன்றி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் டிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (11) நண்பகலில் இடம் பெற்றுள்ளது. சாவகச்சேரி அறுகுவெளி பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, டிப்பர் வாகனமும் ...

மேலும்..

முன்னாள் முதல்வரினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு கணிணி அன்பளிப்பு

பாறுக் ஷிஹான்   கல்முனை ஜாஹிரா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கணனி இயந்திரம் ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார் இது தொடர்பான நிகழ்வு நேற்று முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப்  இல்லத்தில் இடம் பெற்றது இந் நிகழ்வில் இக் கல்லூரியின் ...

மேலும்..

சாய்ந்தமருது போலீஸ் நிலையத்திற்கு கணிணி தொகுதி அன்பளிப்பு

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது போலீஸ் நிலையத்திற்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கணனி பொறியினை அன்பளிப்பு செய்துள்ளார் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின்  நிலையப் பொருப்பதிகாரி ஜனாப் எஸ்.எல் சம்சுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கணிணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பான நிகழ்வு ...

மேலும்..

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு

பாறுக் ஷிஹான் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் ஆகியன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு  சனிக்கிழமை(11) ...

மேலும்..