இரத்தினபுரியில் மண்சரிவு: இரண்டு பேர் பரிதாபச் சாவு – வெள்ள அபாயத்தால் மக்கள் இடம்பெயா்வு…

இரத்தினபுரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் புதையுண்டு பெண்ணொருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லோகுபோதகம தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல பகுதியில் ஒரு பெண்ணும், அலுகால பகுதியில் ஒரு குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று பகல் 12.30 இற்கு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ...

மேலும்..

கொவிட்-19 முடக்கநிலையால் இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும்! ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான முடக்கநிலையால், இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 18 முதல் 24 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோர், முடக்கநிலைக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என சுயாதீனமான ...

மேலும்..

பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடக பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 ...

மேலும்..

டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது – இதனால் 61 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்தவரும் அடை மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ...

மேலும்..

மங்கள சமரவீரவிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை

சுமார் 05 மணிநேர விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாவது தடவையாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சி.ஐ.டி.யில் ...

மேலும்..

இரத்தினபுரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை – பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, ...

மேலும்..

கோட்டாவின் நிர்வாகம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும் – மீனாக்சி கங்குலி

போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப ...

மேலும்..

முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால் யாழில் குடும்பஸ்தர் தற்கொலை

முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான ...

மேலும்..

மன்னாரில் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் ...

மேலும்..

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். மழையுடனான வானிலையால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி ...

மேலும்..

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கனமழை காரணமாக இரத்தினபுரியின் சில பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில் 2020 பொதுத் தேர்தளை நடத்துவது குறித்த பரிந்துரைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. அந்தவகையில் குறித்த பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை ஆணைக்குழுவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ...

மேலும்..

போகம்பறை சிறைச்சாலையில் கைதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை!

விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக போகம்பறை சிறைச்சாலையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்கள் 21 நாட்களுக்கு அங்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பூசா மற்றும் நீர்கொழும்பு ...

மேலும்..

மங்கள சமரவீர இரண்டாவது தடவையாக சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். இந்த ...

மேலும்..