சிறப்புச் செய்திகள்

அரசாங்கம் வழங்கிய வயல் காணிக்கான உத்தியோகபூர்வ உரிமைகோரி போராட்டம்

  ஒன்பது வருடங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தால் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட வயல் காணிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிப்பத்திரத்தின் அசல் ஆவணத்தைக் கோரி, போரால் பாதிக்கப்பட்ட வன்னி விவசாயிகள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த திங்கட்கிழமை, முல்லைத்தீவு, பாண்டிக்குளம் சந்தியில் இருந்து மாந்தை கிழக்குப் ...

மேலும்..

சீனாவின் சி யான் 6 ஆராய்ச்சி கப்பல் இன்று கொழும்பு வருகின்றது

புவிசார் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சீனாவின் சியான் ஆறு ஆராய்;ச்சிக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதி செய்துள்ளார். இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ள கப்பல் இன்று கொழும்புமுறைமுகத்தை வந்தடையும்.. முன்னதாக இந்த கப்பல் நவம்பர் மாதம் இலங்கை வருவதற்கே ...

மேலும்..

கந்தளாய் தளவைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு சிறுநீரக இயந்திரம் வழங்கி வைப்பு

சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இரத்த சுத்திகரிக்கும்  இயந்திரம் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (24) வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள தலைமையில் குறித்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. கந்தளாய், தம்பலகாமம், சேருவில போன்ற ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன பற்றியும், அச்சட்டமூலங்கள் தொடர்பில் தமது சங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ ...

மேலும்..

இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதால் தீர்வை அடையமுடியாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி

மேற்குலக நாடுகளைப் பொறுத்தமட்டில் மனித உரிமைகள் என்பது வெறுமனே பேரம்பேசுவதற்கான கருவி மாத்திரமே என்பதையே இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் செயற்பாடுகள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதன் மூலம் ...

மேலும்..

பலஸ்தீன- இஸ்ரேல் மோதல் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

கடந்த 7 ஒக்டோபர் 2023 இல் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுடன் மீளவும் புதுப்பிக்கப்பட்ட பலஸ்தீன- இஸ்ரேல் யுத்தமானது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை இருதரப்பிலும் மனிதாபிமானமற்ற முறையில் காவுகொண்டபடி முடிவற்று நீண்டுகொண்டிருப்பதையிட்டு நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்படமுடியாத ...

மேலும்..

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி விபத்தில் சிக்கி சாவு!

ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, நேற்று செவ்வாய்க்கிழமை (24) லொறியொன்றினால்  ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்,  பொங்கல் நிகழ்வில் ...

மேலும்..

கணிதப் போட்டியில் 11 நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த 7 வயது மாணவி

கொழும்பு, சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவி மகேஷ்வரன் விவிஷனா தனியார் கல்வி நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த 11 நாடுகள் பங்கேற்ற கணிதப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் ...

மேலும்..

முதுமையில் உள்ள சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக ...

மேலும்..

மன்னார், சிலாவத்துறை மத்தியமகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடிக் கட்டடம் திறப்பு!

மன்னார் சிலாவத்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'குவைத் ஸகாத்'  நிறுவனத்தால் புதிய இரண்டு மாடிக் கட்டடத்தின் திறப்பு விழா திங்கட்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் ...

மேலும்..

மீண்டும் வரிசை யுகம் ஏற்படுமாம்! எச்சரிக்கிறார் ரங்கே பண்டார

மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால்  மீண்டும்  வரிசை நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார். ஐக்கிய ...

மேலும்..

மட்டக்களப்பில் வெளிநாட்டு மோகத்தினால் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிர்க்கதி! சாணக்கியனிடம் அவர்கள் அடைக்கலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தால் பணத்தை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். சுமார் 8 கோடி ரூபாவை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான ...

மேலும்..

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிற்ஸர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு  இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள் ...

மேலும்..

சீனாவின் வியாபாரம் வடக்கிலும் ஆரம்பம்!

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் ...

மேலும்..

பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்!

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் ...

மேலும்..