பிரதான செய்திகள்

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (13) காலை ஆரம்பமானது. அதிகாலை 3  மணியளவில், கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு,  உற்சவம் ஆரம்பமானது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

மேலும்..

சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!

எதிர்வரும் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற் செய்கைக்கான விவசாய சேதன உரத்தை தயாரித்து பயன்படுத்துவற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, சேதன உரத்தை தயாரிப்பதற்கு ஒரு ஹெக்டயருக்கு 12, ...

மேலும்..

20 நாட்களின் பின் மீனவர்கள் கரைசேர்ந்துள்ளனர்!

பொத்துவில் அறுகம்பையிலிருந்து கடந்த மாதம் 23ஆம் திகதி புதன்கிழமஅதிகாலை மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் கரைசேர்ந்துள்ளனர். பொத்துவில் களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹமட் தாஹா, பொத்துவில் பசறிச் சேனையைச் ...

மேலும்..

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது.

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. -குறித்த படகில் பதிவு இலக்கம் , உரிமையாளர் பெயர் ...

மேலும்..

யாழில் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ்.நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ...

மேலும்..

இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – இலங்கை ஆசிரியர் சங்கம்

(க.கிஷாந்தன்)   "இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு எதிராக கல்வி சமூகத்தின் போராட்டம் தொடரும். அத்துடன், பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்." - என்று இலங்கை ஆசிரியர் ...

மேலும்..

வைரஸை வைத்து அரசியலை நடத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்-ஸ்ரீநேசன்

அரசின் கொண்டாட்டங்களின் போது அந்த கிருமி தொற்றாது மக்களின் திண்டாட்ங்களை காட்டும்போது இந்த கிருமி தொற்றுகின்றது, இது ஒரு அரசியல் கிரிமி வைரஷாகதான் இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று(12) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் ...

மேலும்..

யாழ்-குறிகாட்டுவானில் கரையொதுங்கும் இந்திய மருத்துவ கழிவுகள்

யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில்  இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில்  நயினாதீவு கடற்கரை பகுதிகளிலும் பெருமளவான மருத்துவ கழிவுகள் இவ்வாறு கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் !

உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வி ...

மேலும்..

யாழில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாமில் கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தெறியுமாறு கோரி போராட்டம்!

கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தெறியுமாறு கோரி கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால்  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற ...

மேலும்..

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை

பசுமையான சமூக பொருளாதார மாதிரியினை கட்டியெழுப்பும் நோக்கில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லிகள் , இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானமானது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் மாற்றப்பட்டுள்ளது என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ...

மேலும்..

தடுப்பூசிகளை எடுத்துவர இரண்டு விமானங்கள் சீனாவிற்கு சென்றடைந்து!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக இரண்டு விமானங்கள் சீனாவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை எடுத்து வருவதற்காக குறித்த விமானங்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானங்கள் நாளை காலை இலங்கையை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ...

மேலும்..

வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் ஆரம்பம் !

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்இன்று   இன்று {10]நடைபெற்றது. ஆலய கொடியேற்றமானது கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு. சீதாராம குருக்கள் தலைமையிலான குருமார்களினால் இவ் ...

மேலும்..