பிரதான செய்திகள்

பஸிலுக்கு வழிவிட்டு பதவி விலகினார் ஜயந்த கெட்டகொட

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை ...

மேலும்..

777 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிப்பு

சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகள் நேற்று (5) மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத கால பகுதியில் மன்னார் காவல்துறை பிரிவுக்குற்பட்ட பகுதியில் ...

மேலும்..

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வை இன்று (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். இதேவேளை, வலுசக்தி ...

மேலும்..

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை; அவசர தீர்மானம் எடுக்க மாட்டோம் என்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இந்த மாதம் 19 ஆம் திகதி விவாதத்துக்கு ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஐவர் பேராசியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் அரசறிவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான கலாநிதி எம்.எம்.பாஸில், ஜப்பான் ...

மேலும்..

இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)   இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (05.07.2021) நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய மார்கட் கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,625 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,625 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 234,942 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 265,630 ஆக ...

மேலும்..

கடன் பணத்தை கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் ...

மேலும்..

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான திகதிகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (05) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், குறித்த அவநம்பிக்கை பிரேரணையை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – தேவகுமாரை விடுவிக்குமாறு மனைவி கோரிக்கை

உயிர்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எனது கணவரான தேவகுமாரை விடுவிக்குமாறு அவரது ...

மேலும்..

வடக்கில் நேற்று 36 கொவிட் தொற்றாளர்கள்; யாழில் பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் 25 பேர், முல்லைத்தீவில் 10 பேர் உட்படவடக்கு மாகாணத்தில் நேற்று 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் 53 வயது பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்தத் தகவல் வெளியானது. இதன்படி, ...

மேலும்..

க பொ த .உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் இன்று முதல்இணையவழியில்…

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் இன்று(05) முதல் இந்த புதிய நடைமுறை அமுலாகுமென  பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையொன்று ...

மேலும்..

நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்யும்!

நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..

மூன்று அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு

(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் 04.07.2021 அன்று மதியம் சுமார் மூன்று அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த  சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா ...

மேலும்..

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக உள்ளதால் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆரயவேண்டிய தேவையில்லை– நாமல்

இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வது கருத்துக்களை வெளியிடுவது அவசியமற்ற செயல் என அமைச்சர் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். சண்டேஒப்சேவருக்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற ...

மேலும்..