பிரதான செய்திகள்

முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல்

முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில், இன்று (04) இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பகுதியில், பெரும் பதற்றம் நிலவியது. ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ...

மேலும்..

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு (Sulu) மாகாணத்தின், ஜொலோ ...

மேலும்..

கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் எட்டு கடைகளுக்கு பூட்டு

கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது. வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று இரவு (03.07) வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், நவீன  சந்தை தொகுதியில் 7 ...

மேலும்..

பாடசாலைகளைமீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சின் நிலைப்பாடு

மாணவர்கள் 100 க்கும் குறைவான பாடசாலைகளை இம்மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிப்பது என்பது அதற்கான வழிகாட்டி ஆலோசனை தயாரிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே ஆகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற (03) செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது ...

மேலும்..

ஒரு மில்லியன் சினோர்ஃபாம் வந்தடைந்தது

சீனாவின் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றுமோர் பங்கு இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள், பீஜிங்கிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமானமூடாக இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ...

மேலும்..

தூனிசியாவில் படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் ...

மேலும்..

கல்முனையில் சமூகங்களின் ஒற்றுமை அவரவர்களுடைய நீதியான, நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலேயே தங்கியுள்ளது… பாராளுமன்ற உறுப்பினர் -கலையரசன்

கல்முனையில் இரண்டு சமூகங்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவரவர்களுடைய சுதந்திரமான, நீதியான, நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நேற்றைய தினம் கல்முனை வடக்கு பிரதேச செயலக ...

மேலும்..

ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடந்த ஜுன் 30ஆம் திகதி பதவியுயர்வு பெற்ற அஜித் ரோஹன உள்ளிட்ட ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடமாற்றங்கள் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த ஏழு பிரதி பொலிஸ் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இன்று சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று இன்று(03) பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு காலை 11.30 மணி தொடக்கம் மதியம் 1 மணிவரை இடம்பெற்றது. இதில் ...

மேலும்..

மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

(க.கிஷாந்தன்) பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய திருக்கேதீஸ்வரன் (சங்கர்) என்பரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03.07.2021) காலை அவரது வீட்டிலிருந்து ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளன என்று கல்வி அமைச்சில் இன்று (02) நடைபெற்ற ஊடக ...

மேலும்..

வடக்கில் நேற்று 128 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 128 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 90 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ...

மேலும்..

இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி – மனோ கணேசன்

“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பல் மூலமான இரசாயன கழிவினால் இலங்கை கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்திய கடற்படை கப்பல் மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத்தக்கது.   வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கை கடல் வளத்துக்கு, “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன ...

மேலும்..

தாதியர்களின் 7 கோரிக்கைகளில் ஐந்திற்கு ஜனாதிபதி உடனடி தீர்வு

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். அரச ...

மேலும்..

நயினாதீவு ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்க்குமாறு கோரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் ...

மேலும்..