பிரதான செய்திகள்

அமெரிக்கத் தூதுவரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் ...

மேலும்..

யாழில் இதுவரை 51,390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ஆசிரியர்,அதிபர்,கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு  கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7,432 இதுவரை கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வாரம் முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51,390 பேர் இதுவரை ...

மேலும்..

7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும் 7 பேரே இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ...

மேலும்..

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் ...

மேலும்..

பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் – டக்ளஸ்

பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை இன்று(புதன்கிழமை) ...

மேலும்..

கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் ஆறாவது நாளாக போராட்டம்

கடந்த 08.07.21 அன்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட ...

மேலும்..

நாளை திருகோணமலை மாவட்டத்தில் 12 மணி நேர நீர் வெட்டு

அவசர பிரதான நீர் குழாய் திருத்த வேலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் குழாய் நீர் வெட்டு 12 மணி நேரம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெயந்தன் தெரிவித்தார். குறித்த நீர் வெட்டானது ...

மேலும்..

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு – சவேந்திர சில்வா!

நாட்டில் பாரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகளையும் ...

மேலும்..

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அனூப பெல்பிட அவர்கள்  பிரதமரிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றார்

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.அனூஷ பெல்பிட அவர்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும்  பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து இன்று (14) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இணைந்த சேவைகள் ...

மேலும்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டார். அவர் இன்றையதினம் உத்தியோக பூர்வமாக ...

மேலும்..

திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி

திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6015 ஆக அதிகரிப்பு

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ் மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் ...

மேலும்..

அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் நேர்மையுடன் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறுவ பிரதமர் ஆலோசனை

அரச மற்றும் அரை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் ...

மேலும்..

பூநகரி பகுதியில் கடலட்டை பண்ணையை அகற்றாவிட்டால் நாம் பண்ணை அமைப்போம்’

கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைப்போமென,    வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழில், இன்று (13) நடைபெற்ற ...

மேலும்..

முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 32வது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பண்ணாகத்தில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவ சிலை அமைந்துள்ள இடத்தில் நடந்த இந்த நிகழ்வில், உருவச்சிலைக்கு முன்பாக ...

மேலும்..