பிரதான செய்திகள்

நாட்டின் எதிர்கால பயணத்தை ஆசீர்வதிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி இச்சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுத் தருமாறு அழைப்பு விடுக்கின்றேன்

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நிறுவும் சட்டமூலத்தை இன்று இந்த சபையில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்புதிய கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் கடந்த 2014 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதொன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ...

மேலும்..

நேற்று 38, 263 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன!

இலங்கையில் நேற்று 38, 263 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, அஸ்ட்ராசெனெகா இரண்டாம் மாத்திரை தடுப்பூசிகள் 5,229 பேருக்கும், சினோபாம் முதலாம் மாத்திரை தடுப்பூசிகள் 33, 017 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று ஸ்புட்னிக்-வீ தடுப்பூசி ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஜோப்ரெட் வர்கீஸ் ...

மேலும்..

இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது

இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இலங்கையில் நேற்றைய (18) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைவாக ,இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ...

மேலும்..

இலங்கை உள்ளிட்ட 3நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

இலங்கை உள்ளிட்ட 3நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. இலங்கை, பங்களாதேஸ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளுக்கு நிதியுதவிகளை பெற்று கொடுக்கவும் –  பிரதமர் 

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) பாராளுமன்ற குழு அறை 02 இல் இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் ...

மேலும்..

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட இதனை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார். தடுப்பூசிகள் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கும் ...

மேலும்..

அரச பணியாளர்களுக்கான முன்கூட்டியே சம்பளம் வழங்க நடவடிக்கை!

அரச பணியாளர்களுக்கான இம்மாத சம்பளத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு பூராகவும் 21ஆம் திகதியிலிருந்து பயணத் தடைகள் விதிக்கப்பட்வுள்ள நிலையில், அரச பணியாளர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்கத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். நிதியமைச்சரான ...

மேலும்..

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

(சந்திரன் குமணன்) முள்ளிவாய்க்கால்  12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும்..

யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது – பாராளுமன்றத்தில் பிரதமரிடம் சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இறந்ததை நினைவுப் படுத்தியிருந்தார். இந்த நிலையில், பிரதமரின் ...

மேலும்..

யாழ் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும்..

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து இன்று (18) காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மேலும் சில பிரதேசங்கள் இன்று (18) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை ...

மேலும்..

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் சபாநாயகர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின்  நிலைப்பாட்டை  சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகள் எனவும், ஏனைய சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் உயர் ...

மேலும்..

காரைதீவில் கூடிய விசேட சபைஅமர்வு ; பிரேரணை நிறைவேற்றம்!

 (நூருல் ஹுதா உமர்) கடந்த வாரம் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் 39 வது சபை அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஐந்து உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஆறு உறுப்பினர்கள் நடுநிலையாகவும், ஒருவர் எதிராகவும் வாக்களித்தமையால் அது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ...

மேலும்..

இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது ...

மேலும்..