பிரதான செய்திகள்

இலங்கையர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எதிர்வரும் புதன்கிழமை இரவு முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்றும் ...

மேலும்..

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வைகாவிசாகப் பொங்கலை அறிவிக்கும், பாக்குத்தெண்டல் மரபுவழியில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் வருகின்றது என்பதைஅறிவிக்கின்ற, முதல் சடங்கான பாக்குத்தெண்டல் நிகழ்வு 10.05.2021 இன்று அதிகாலை இடம்பெற்றது. அந்தவகையில் அதிகாலை 02.00 மணியவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள கண்ணகியம்மன் சந்நிதானத்தில் விசேட பூசைவழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து ...

மேலும்..

தேசிய அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பு!

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள மேலும் ஒரு தொகையினரின் அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், தேசிய அடையாள அட்டையை மே மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கான நேரம் ...

மேலும்..

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்ஹெயினுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது!

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்ஹெய்ன்  போதைப் ​பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (9)  காலை 9 மணியளவில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதென, சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்க பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கொக்ஹெய்ன் ...

மேலும்..

யாழ் நகரில், நஞ்சருந்தி உயிரிழந்த கணவன்; தகவலறிந்து அதே நஞ்சருந்தி உயிர்நீத்த மனைவி!

கணவர் இரசாயன திரவம் அருந்தி உயிரிழந்த தகவலறிந்ததும், மனைவியும் அதே இரசாயனத்தை பருகி உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ் நகரம், கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைத்தொழிலக பட்டறையொன்றில் நேற்று (8) இடம்பெற்றது. திருநெல்வேலியை சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (34), மனைவி ரஜிதா (33) இருவருமே உயிரிழந்தனர். பகீரதன் நேற்று ...

மேலும்..

தமிழர்களை காட்டிக் கொடுத்தது நீங்கள் தான் ஹரீஸ் எம்.பிக்கு ஜெயசிறில் பதிலடி !

தமிழர்கள் காட்டிக்கொடுத்தார்கள் கைக்கூலிகள் என ஹரீஸ் எம்பி. பேசியதை வன்மையாகக்கண்டிக்கிறேன். உண்மையில் கடந் தகாலங்களில் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தது நீங்கள்தான் என்பதை உலகறியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்பி பேசியதற்கு கண்டனஅறிக்கையொன்றை ...

மேலும்..

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயார் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்கவும்

(க-சரவணன்) மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0750462897 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5 ம் திகதி கிரான் பாரதி ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் – கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள் சந்திப்பு;தேர்தல் முறைமை குறித்து ஆய்வு

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு ...

மேலும்..

மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழருக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்;மாவையிடம் சமல் உறுதி!

மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபைக்கு எட்டு கிராமசேவகர் பிரிவுகள் கையளிக்கப்படுவது பற்றியும், கல்முனை ...

மேலும்..

மது போதையில் அம்பாறை போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய கெப் ரக வாகனத்தின் சாரதி…!!

அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்கு உள்ளாக்கிய கெப் ரக வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் அரச அதிகாரி ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.வாகன ...

மேலும்..

தேங்காய் எண்ணெய் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின் கீழ் ...

மேலும்..

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே? – சாணக்கியன் கேள்வி!

இதுவாரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை கோடீஸ்வரனும் நானும் இணைந்து செய்தோம்-சுமந்திரன் எம்.பி

(பாறுக் ஷிஹான்) கல்முனை உப பிரதேச செயலக அமைச்சரவை பத்திரத்தை எவருக்கும் நான் கொடுக்கவில்லை. இது தொடர்பாக திரு கோடீஸ்வரனும்(முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) நானும் இணைந்து தான் எல்லா செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலக ...

மேலும்..

அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ...

மேலும்..