பிரதான செய்திகள்

தேசிய கண் வைத்தியசாலையின் விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று  பரவல் காரணமாக தேசிய கண் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகைத் தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு, அருகில் உள்ள அரச வைத்தியசாலையின் கண் நோய் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, தொடர் சிகிச்சைப் பெறும் ...

மேலும்..

கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி

தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும்..

துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள்சக்தி ஆர்ப்பாட்டம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சட்டமூலம் குறித்த விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும்..

லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி; லேப்டாப் பரிசளித்த எம்.எல்.ஏ!

விழுப்புரம் அருகே உள்ள அளிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதனேசன் - தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுடைய 10 வயது மகள் சிந்துஜா. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இச்சிறுமி, அதன் ...

மேலும்..

மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ இந்தியாவில் காலமானார்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் கடந்த மூன்று வருடங்களாக மன்னாரில் இருந்து பாத யாத்திரை , மற்றும் உண்ணா நோன்பை மேற்கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ...

மேலும்..

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார் ;இந்தியாவில் சம்பவம்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களை போலீஸார் தோப்புக்கரணம் போட வைத்தது வைரலாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வாரம் முதலாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவசர தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியே ...

மேலும்..

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 493 பேர் நேற்று கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், நேற்று 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ...

மேலும்..

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசேட அறிவுறுத்தல்

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு COVID – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று! தனியார் வைத்திசாலையில் அனுமதி ..

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்த குடும்ப அங்கத்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி : உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இளங்கலைமாணி மொழிபெயர்ப்புக் கற்கைநெறி (சிறப்பு) (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பல்கலைக்கழக அனுமதி 2020/2021 உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test) இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்குரிய உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம் இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கு (நான்கு வருடம்) அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து ...

மேலும்..

தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது-சாணக்கியன்

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுக ...

மேலும்..

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் ...

மேலும்..

பல்கலைகழக விண்ணப்பம் கோரல் தொடர்பான அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும்..

முன்னாள் வடமாகாண ஆளுநருக்கு புதிய நியமனம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக முன்னாள் வடமாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்க நிலை மேலும் வலுவடைவதற்கான ...

மேலும்..