பிரதான செய்திகள்

மட்டக்களப்பில்,இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாதாக இன்று வியாழக்கிழமை ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ...

மேலும்..

திருகோணமலையில் சட்டவிரோத வெடிமருந்துகள் மீட்பு; இருவர் கைது!

திருகோணமலை மாவட்டத்தின் இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்றிரவு (26) சட்டவிரோத வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று (27) அதிகாலை விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் இருவர் கைது செய்யப்பட்டு, குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத வெடிமருந்துகளை ...

மேலும்..

யாழ். மாவட்ட மக்களுக்காக அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வி​​சேட தொடர்பு இலக்கங்கள் அறிமுகம்

யாழ். மாவட்ட மக்களுக்காக அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் 24 மணிநேரமும் அணுகுவதற்கு வி​​சேட தொடர்பு இலக்கங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 021-222 5000, 021-222 1676, 021-211 7117, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

மேலும்..

இலங்கை மின்சார சபைக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள்!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையின் தொலைபேசி சேவைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு கூட ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ...

மேலும்..

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவிபிரமாணம்!

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார். பதவிப்பிரமாணத்தின் போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி ...

மேலும்..

கொரோனா மேலும் 1,203 பேர் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 1203 பேர் குணமடைந்து இன்று (26) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 334 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 69ஆயிரத்து 900 ...

மேலும்..

ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

புனித வெசாக் தினமான இன்று (26) 2021 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (26)மாலை 6.23க்கு தென்கிழக்கு வான்பரப்பில் தோன்றும் சந்திர கிரகணத்தை இரவு 7.20 வரை இலங்கையில் பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் ...

மேலும்..

கொரோனா சடலங்களுக்கான காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக தெஹிவளை - கல்கிஸை நகர சபையினால் காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அப்புறப்படுத்தப்பட்ட காகிதம் மற்றும் காட்போட் அட்டைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக நகரசபை உறுப்பினர் பிரியந்த சஹபந்து கூறியுள்ளார். இதன் ஊடாக,  சவப்பெட்டிகளின் உற்பத்திக்காக வெட்டப்படும் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று முதல் பதினான்கு நாட்களுக்கு சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (26) புதன் கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயலவர் ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவரை தனது ...

மேலும்..

தீப்பிடித்த கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்கள்… வீடுகளுக்கு அள்ளிச் சென்ற மக்கள்!

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அதிலிருந்து பொருட்கள் கடலில் வீசுப்பட்டுள்ளன. இந்த நிலையில், கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருள்களை, பயணக்கட்டுப்பாட்டை கணக்கில் எடுக்காத மக்கள் தமது வீடுகளுக்கு அள்ளிச்செல்வதை காண முடிகின்றது. குறித்த கப்பல் இரசாயன ...

மேலும்..

யாழில் ட்ரோன் கெமரா கண்காணிப்பில் 10 பேர் கைது

யாழில் ட்ரோன் கெமரா கண்காணிப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழில் இன்றைய தினம் விமானப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிசார் இணைந்து ரோன் கமரா பயன்படுத்தி யாழ் நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்ததில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

வௌிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான தடை நீக்கம்

வௌிநாட்டு   பயணிகளுக்காக தற்போது மூடப்பட்டுள்ள இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 1 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் கடந்த 14 தினங்களுக்குள் இந்தியாவுக்கு விஜயம் ...

மேலும்..

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் சிறிய தவறுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என,  சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான ...

மேலும்..

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. சீனாவிலிருந்து 5 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் வந்தடைந்துள்ளது. குறித்த 5 இலட்சம் தடுப்பூசிகளும் இலங்கைக்கான ...

மேலும்..