பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பூசி ;வட்ஸ்அப் அல்லது குறுஞ் செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ...

மேலும்..

இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . இருப்பினும், வாடிக்கையாளர்கள் இதற்காக வருவது சாத்தியமில்லை . சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ...

மேலும்..

5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

ஜூன் 2 முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் என்று சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். அதன்படி, சமூர்த்தி பெறுநர்கள், பிற அரசு கொடுப்பனவு பெறுநர்கள், குறைந்த வருமானம் ...

மேலும்..

மட்டக்களப்பு-கரடியனாற்றில் கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசாலையை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் இன்று 28.05.2021 ஆந் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கொவிட் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 1000 கட்டில்களை ...

மேலும்..

பொருட்களை அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் : அமைச்சர் லசந்த அழகியவண்ண

பயணக் கட்டுப்பாடுகள் அமுலிலுள்ளதால் வியாபாரத்துக்கு அனுமதி பெற்ற கடைகள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவிலுள்ள மற்றொரு கடைக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க ...

மேலும்..

இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்-மனோ கணேசன் 

இந்த நாட்டில், சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ ...

மேலும்..

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதிவரை மேலும் நீடிப்பு – இராணுவத் தளபதி

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய ...

மேலும்..

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானிவெளியீடு!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை​மையை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் பல அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், நேற்று (27) வெளியிடப்பட்டது. துறைமுகம், எரிபொருள், பொதுபோக்குவரத்து, மத்தியவங்கி, அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், சேவைகள் ...

மேலும்..

சுவசெரிய அம்பியுலன்ஸில் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம்

கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸில் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தாயும் குழந்தையும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை 1990 சுவசெரிய சேவையில் பயணியாற்றும் ரவிந்து அம்பியுலன்ஸிற்கு வெளியே வரும் போது ...

மேலும்..

பயணத்தடை அமுலிலுள்ள போது, யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று(27) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் கையில் காயமடைந்த இளைஞன் ...

மேலும்..

கடலில் கரையொதுங்கிய பொருட்களை சேகரித்தவர்களுக்கு ஒவ்வாமை

எக்ஸ்பிறஸ் பேர்ள்ஸ் கப்பலில் இருந்து கடலில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க கடலுக்குச் சென்றவர்கள் ,பொருட்களை தொட்ட சிலருக்கு  ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நச்சு இரசாயனங்கள் இருப்பதாக அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எரியும் கப்பலில் இருந்து மிதக்கும் பொருட்களை சேகரித்த ...

மேலும்..

தீப்பற்றிய கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து- மத்திய சுற்றுச்சூழல் ஆணையம்

கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் ...

மேலும்..

துறைமுக நகர சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழு வருகை!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 6 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ...

மேலும்..

புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம்  பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு

கொழும்கு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும்,  பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் (26) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கங்காராம விகாரைக்கு வருகைதந்த கௌரவ பிரதமர் மற்றும் அவரது பாரியார் ...

மேலும்..