பிரதான செய்திகள்

மாத்தறையில் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறித்து கண்காணிப்பதற்காக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (30) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அதற்கமைய மாத்தறை வெல்லமடம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திற்கு விஜயம் செய்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

14வயது சிறுவனின்சாதனை; கின்னஸ் நிறுவனம் வழங்கிய அங்கீகாரம்!

கண்டியில் வசித்து வருகின்ற இந்திய நாட்டை சேர்ந்த சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) என்ற மாற்றுத் திறனாளியான சிறுவன் ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சித்திரக் கலைஞர்கள் தங்களுடைய சித்திரங்களை முகநூல் ஊடாக அதிகளவான ...

மேலும்..

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்!

2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனை கோவை கல்வி அமைச்சினால் வௌியிட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும் ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து ...

மேலும்..

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்;12 மையங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு! !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இன்று (30) 12 மையங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள், நேற்று (29) கிடைத்துள்ளன. இந்தத் தடுப்பூசிகளை அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏற்பாட்டை, சுகாதாரப் ...

மேலும்..

கொரோனா காரணமாக, 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர் என்று மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல் மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மீண்டும் ஒருபோதும் புகைப் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…

நாட்டில் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் ...

மேலும்..

எதிர்வரும் 31 ஆம் திகதி, அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் வாகனங்கள் !

அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் ,இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர ...

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50,000 சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன-வைத்தியர் கேதீஸ்வரன்!

கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50,000 சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ...

மேலும்..

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அம்மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (29)  இடம்பெற்றது. குறித்த கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்தின் கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) முற்பகல் அறிவுறுத்தினார். கப்பல் தீவிபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை விடுத்து கொவிட் தொற்றை ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்யுங்கள்-.கருணாகரம் (எம்.பி)

தற்போயை நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கொவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

வீட்டை விட்டு தப்பி ஓடிய கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன்;தகவல் கிடைத்தால் அறிவிக்கவும்

பொரள்ள பொலிஸ் பிரிவில் உள்ள மெகசின் வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். மெகசின்  பகுதியில் உள்ள சங்கீத் தனுஸ்க என்ற 28 வயதுடைய இளைஞனுக்கு தொற்று இருப்பது ...

மேலும்..

திருமலை வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம்

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான பி.சி.ஆர் இயந்திரமொன்றை உடனடியாக அனுப்பிவைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப்படுவதாகவும் தேவை கருதியே ...

மேலும்..

பல்கலைக்கழக விண்ணப்பத்துக்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நடமாட்டக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தககடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று காவல்துறைப் பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும்..