பிரதான செய்திகள்

24 மற்றும் 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் கொரோனவால் மரணம்!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மரணம் அடைந்துள்ளார். இவர் மூதூர் கிழக்கு சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் குருளைச் சாரணர் பிரிவுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட ...

மேலும்..

தமிழ்மொழி புறக்கணிப்பினை சுட்டிக்காட்டிய சாணக்கியன் – சீன தூதரகம் உடனடி நடவடிக்கை!

மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகள் புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்று அமைத்துள்ள பெயர்பலகையில் ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் நிபந்தனைகளுடன் நினைவேந்தல் செய்ய அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ம் ஆண்டு நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது. அங்கு யாரும் செல்லாத ...

மேலும்..

இந்து பண்பாட்டு நிதியத்திற்கு  பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான  உறுப்பினர்களை நியமித்தார். இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தடையை ரத்துச்செய்யகோரி நீதிமன்றத்தில் பத்திரம்!

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு ...

மேலும்..

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை   நாளை அதிகாலை   4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள ...

மேலும்..

பலஸ்தீன் காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்

பலஸ்தீன் காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். இந்த தாக்குதல் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடந்தது. முன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை ...

மேலும்..

பாடசாலை கல்வியை முடித்து பிள்ளைகள் 21 வயதை அடையும் போது பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய ஏற்பாடு!

புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை ...

மேலும்..

அனுமதிப்பத்திரம் பெற்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!

மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் அவசியமான நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இன்று (16) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, மொத்த விற்பனையாளர்கள், தங்களது பிரதேச செயலகத்தில் அனுமதிப்பத்திரம் பெற்று, மொத்த ...

மேலும்..

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது – சாணக்கியன் காட்டம்!

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

மேலும்..

முஷாரப் எம்.பிக்கு அரசியலறிவு போதாது : கறுப்புக்கொடி விவகாரம் மக்கள் காங்கிரசின் முடிவல்ல, அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு – மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் அறிவிப்பு

(நூருல் ஹுதா உமர்) தலைவர் றிஸாத்தின் கைதை கண்டித்து பெருநாள் தினத்தன்று கறுப்புக்கொடி பறக்கவிடுங்கள் எனும் கோரிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கையல்ல. அது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே. அண்மையில் அவர் பொத்துவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்!

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று (புதன்கிழமை), குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல் ஒன்றும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ...

மேலும்..

வீட்டில் இருந்து வௌியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை!

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வௌியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் நாளை (13) முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ...

மேலும்..