பிரதான செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவரது இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயமானது அரசியல் தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகரிப்பது மாத்திரமன்றி இராணுவ தொடர்புகள் பற்றியும் அவதானம் செலுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் ...

மேலும்..

அரச ஊழியர்கள் தொடர்பில் இன்று வௌியிடப்படவுள்ள சுற்றுநிருபம்

அரச ஊழியர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ...

மேலும்..

இலக்கை நோக்கிப் பயணித்தால் வெற்றி உறுதி! – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சம்பந்தன்

நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போம். அப்போதுதான் நாம் வெற்றியடைய முடியும்.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இம்முறை அமோக அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க ...

மேலும்..

பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – சுதத் சமரவீர

நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பணிகளுக்குச் செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய கொவிட்-19 நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய போது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். மேல் மாகாணம் உள்ளிட்ட ...

மேலும்..

ரிஷாட் மற்றும் ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் விசாரணை செய்வதற்கான தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 ...

மேலும்..

வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் ...

மேலும்..

இந்தியாவின் நிலைமை கவலை அளிக்கிறது; கூகிள் 135 கோடி நிதியுதவி

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூகிள் மற்றும் சார்பு நிறுவனங்கள் 135 கோடி நிதியளித்துள்ளன. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ...

மேலும்..

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் சுற்றறிக்கை நாளை

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபனம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ,அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே ஜே. ரட்னசிரி தெரிவிக்கையில் ,அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் அனுஸ்டிப்பு !

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதற்கமைய தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் ...

மேலும்..

வவுனியாவில் தந்தை செல்வாவின் 44 வது நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் தந்தைசெல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று (26.04.2021) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழரசு கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் அதன் பின்னர் ஏனையவர்களால் ...

மேலும்..

ரிஷாத் கைது, ஹரின், மனுஷா மீதான அச்சுறுத்தல்: நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்! – மனோ அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றது. இவை ...

மேலும்..

இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கு விஜயம்

(க.கிஷாந்தன்) இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கான விஜயத்தின் போது அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். விஜயத்தின் போது மேற்படி அட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார். அதன்பின் கொட்டகலை பகுதியில் உள்ள ...

மேலும்..

சீன ஆதிக்கம் அதிகரிப்பதால் தமிழர் விடயம் பேசப்படலாம்! – முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

யாழில் தந்தை செல்வாவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் ...

மேலும்..