பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர்..

பொலிஸார் துரத்தி சென்ற டிப்பர் வாகனம் ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிக்கொண்டு தப்பி சென்ற போதிலும், விபத்துக்குள்ளான ஆசிரியை மீட்காது பொலிஸாரும் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி- திக்கம் பகுதியில் ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா, இராகலை மாகுடுகல - கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.04.2021) முற்பகல் நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இராகலை சூரியகாந்தி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத மலையக அரசியல் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வீடுகளில் கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் அறுவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண் தங்க நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை ...

மேலும்..

கிழக்கின் முதல் மருத்துவ பேராசிரியராக பட்டம் பெற்ற உமாகாந்தன் கௌரவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதல் மருத்துவ பேராசிரியராக பட்டம்பெற்ற வைத்திய பேராசிரியர் மகேசன் உமாகாந்தனை வைத்தியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (22) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில் ...

மேலும்..

யாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் திறப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 216 பேர் குணமடைவு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,884ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

 சிறுவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேசனின் “ஆங்கில சொற்திறன்’போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல் !

(எம்.என்.எம்.அப்ராஸ்) சிறுவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் ‘Spelling Bee’எனும் ஆங்கில சொற்திறன் போட்டியை ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன்அம்பாறை மாவட்ட ரீதியில் நடாத்த திட்டமிட்டுள்ளது. இது  சிறுவர்களின் ஆங்கில மொழிச் சொற்களின் எழுத்துவரி (spelling), மொழி,இலக்கணம், உச்சரிப்பு (Phonetic), பிரயோகம் ஆகியவற்றை நேர்த்தியாக உபயோகிப்பதை ஊக்கப்படுத்தும் ...

மேலும்..

மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை பிரதமருக்கு வழங்கி வைப்பு

மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (22) முற்பகல் வழங்கி வைக்கப்பட்டது. ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் ...

மேலும்..

யாழ் பல்கலை துணைவேந்தர் மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாளைய தினம் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை நாளை காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திறந்து வைக்க இருந்த நிலையில் ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று  நிலைமை தீவிரமடையலாம்-மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா ...

மேலும்..

வவுனியா நகரசபையால் 40 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

வவுனியா நகரசபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன. புதுவருடப் பிறப்பைத் தொடர்ந்து நகரில் அதிகரித்துள்ள வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ...

மேலும்..

குளவி கொட்டியதினால் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை!

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம்இன்று (22)முற்பகல் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேரும், ஆண் ...

மேலும்..

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ...

மேலும்..

வவுனியாவில் குடும்ப பெண் ஒருவர் கைது

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண் ஒருவரை பொலிசார் நேற்று (21.04) மாலை கைது செய்துள்ளனர். வவுனியா போதை ஒழிப்பு பிரிவுப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து உக்கிளாங்குளம் - கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் ...

மேலும்..

பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆராய 7 பேரைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் நேற்று (21) ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து கவலையடைவதாகத் தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின் பின்னர் ...

மேலும்..