இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளும் சுயாதீனக்குழுக்களும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை ...

மேலும்..

வவுனியாவைச் சேர்ந்த பெண் மகளை கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சி – பிரிட்டனில் சம்பவம்

வவுனியா –  நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் வயது தாய், பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த ...

மேலும்..

187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் தொடர்கிறது

கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பழுதூக்கிகளை அங்கு உடனடியாக பொருத்துமாறு கோரியே அவர்கள் ...

மேலும்..

தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ...

மேலும்..

தரம் 01, 02, முன்பள்ளி ஓகஸ்ட் 10இல் ஆரம்பம் – கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் ஜூலை 07 ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீளத் திறப்பதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை ...

மேலும்..

அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்திவேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் வலியுறுத்து

"சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடன் விடுவிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் ...

மேலும்..

ஓர் ஆசனம்கூடப் பெற வக்கில்லாதவர்கள் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடு – மாற்று அணிகளுக்கு சம்பந்தன் சாட்டையடி

"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனம்கூடப் பெற  வக்கில்லாத மாற்று அணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடானது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் ...

மேலும்..

காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த

காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் ...

மேலும்..

சில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) மலையகத்தில் புதிதாக போட்டியிடும் சிலர் அரசியல் முகவர்கள். தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே இவர்கள்  களமிறக்கப்பட்டுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். லிந்துலையில் 01.07.2020 அன்று நடைபெற்ற ...

மேலும்..

எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம்…

எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம்… (தமிழ் அரசியல்வாதிகளிடம் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வேண்டுகோள்) கடந்த காலங்களில் தங்கள் பதவிகளால் ஏதேனும் சேவைகள் ஆற்றப்பட்டிருந்தால் அதனைச் சொல்லி வாக்குக் கேளுங்கள் எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் ...

மேலும்..

கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு விழா…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் எழுதிய 'கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு விழா' நேற்று(30) நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நாடு முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் ...

மேலும்..

மலையகத்தின் எதிர்காலம் என்னவோ அதற்கே நாங்கள் முக்கியத்தும் அளிப்போம். நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாயர் எம் உதயகுமார் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் மலையகத்தில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் தனி ஒருவராக நின்று எவ்வாறு வேலை செய்தாரோ அவ்வாறே நான் அவரோடு நின்று தோழோடு தோல் கொடுத்து மலையகத்தின் எதிர்காலம் என்னவோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம் என நுவரெலியா மாவட்ட ஐக்கிய ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் சகல பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டார் விமலலேஸ்வரி! செயலாளர் துரைராஜசிங்கம் அதிரடி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

கல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு

அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து பாடசாலைகளும் ...

மேலும்..

7 கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களுடன் பெண் ஒருவர் அதிரடியாக கைது

ஹோமாகம பகுதியில் வீடொன்றின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 07 கை குண்டுகள், இரண்டு குண்டு துளைக்காத கவசங்கள், ஒரு துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போதே குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 7 கைக்குண்டுகள், ...

மேலும்..