இலங்கை செய்திகள்

தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் ...

மேலும்..

பொதுத் தேர்தல்: சுகாதார வழிகாட்டுதல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது – சுகாதார அமைச்சர்

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளமை ...

மேலும்..

யாழ். பாசையூர் கடலில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (புதன்கிழமை) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து ...

மேலும்..

அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் – மைத்திரி

சர்வதேச பொலிஸ் ஊடாக அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ’21 ...

மேலும்..

நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நாடாளுமன்றமொன்று இல்லாமல் செயற்பட முடியாது – ரணில்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்ற உண்மைத் தன்மையை, அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 பேர் பூரண குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயில் கும்பாபிசேகம் பிற்போடப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிசேக திருவிழா எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறாது என திருக்கேதீஸ்வர திருத்தல திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா ...

மேலும்..

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை மற்றும் மகள்: தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இருவரும் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், நேற்று ...

மேலும்..

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது – அங்கஜன்

மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் ...

மேலும்..

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுப்பு

முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் பாவனையிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த 21 வயதான யுவதியின் சடலம் பொருமிப்போன நிலையில் இன்று (புதன்கிழமை) பகல் கண்டெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 31ஆம் திகதி ...

மேலும்..

பாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக் குழுவினரின் செயற்பாட்டை, கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 59 வயதுடைய தோட்டத் தொழிலாளரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, குளவிக்கொட்டுக்கு ...

மேலும்..