இலங்கை செய்திகள்

மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் முன்னாள் பெண் போராளிக்கு உதவி…

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் நலன்புரிச் சங்கத்தின் இணைப்பாளர் என்.நகுலேஸ் அவர்களிடம் மேற்படி பெண் போராளியினால் ...

மேலும்..

‘தேர்தல் திகதி நிர்ணயிப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகளுடன் ஆணைக்குழு பேச வேண்டும்’ – அஷாத் சாலி கோரிக்கை!

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார். தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற (03) ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தாவது, “சுயாதீன ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

(க.கிஷாந்தன்) பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, ...

மேலும்..

முடிவில்லாமல் தொடரும் ‘கொரோனா; நேற்று 66 பேர்; இன்று இதுவரை 32 பேர் மொத்தப் பாதிப்பு 1,749; குணமடைவு 839

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்மைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,781 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 66 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கட்டாரிலிருந்து வந்த 19 பேர், பங்களாதேஷிலிருந்து ...

மேலும்..

துரைரட்ணம் விடயத்தில் அமீரின் தீர்ப்பும்! சுமந்திரன் விடயத்தில் சம்பந்தன் தீர்ப்பும்!

1959  ஆம் ஆண்டு இலங்கை நாடாளு மன்ற அங்கத்துவத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக் கப்பட்டபோது வகுக்கப்பட்ட தொகுதிதான் பருத்தித் துறைத்தொகுதி. தொண்டைமானாறு தொடக்கம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்லிபுரம், நாகர்கோயில், செம்பியன்பற்று, உடுத்துறை, ஆளியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு வரைக்கும் வெற்றிலைக் கேணி ...

மேலும்..

தமிழர் தாயகத்தில் மக்களை அச்சுறுத்திய ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் படுகொலைகள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 931  பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு இன்று ...

மேலும்..

கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்து சுதந்திரம் ...

மேலும்..

அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்:

ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03.06.2020) கைகலப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ஏறாவூர்-5 தமிழ் பிரிவு எல்லையில் உள்ள ...

மேலும்..

கொவிட் – 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகை செய்கையாளர் பாதிப்பு

வவுனியா நிருபர் கொவிட் - 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வவுனியாவில் விவசாய திணைக்களம் மற்றும் இந்திய துணைதூரகம் என்பவற்றின் அணுசரணையில் 10 பேர் வரையில் மல்லிகை செய்கையில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கிலோ மல்லிகை மொட்டு 3000 ரூபாய்க்கும், ஒரு ...

மேலும்..

மேலும் 03 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 1749 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 899 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினர் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து

கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த அனுமதியை இரத்து செய்யும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான ...

மேலும்..

வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண் வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பாத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது- பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் கைத்தொலைபேசியும் மீட்பு

பாறுக் ஷிஹான் கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் ...

மேலும்..

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தினை சேதப்படுத்திய வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். ...

மேலும்..