இலங்கை செய்திகள்

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் சுபுன் எஸ் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்திரகே முன்னர் கொழும்பு கப்பல்துறையில் சுற்றுச்சூழல் அதிகாரியாக பணியாற்றினார். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் சிறிபால அமரசிங்கவிற்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் : கையினை அறுத்து மருத்துவமனையில் அனுமதி !

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  குறித்த மாணவன் போதை ஊட்டிய ...

மேலும்..

அனுராதபுரத்திற்கு இன்று விசேட ரயில்

அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்த தேரின் இறுதிக் கிரியைகள் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இன்று ...

மேலும்..

இவ்வாண்டு முதல் 8 மாதங்களில் ஆடை ஏற்றுமதி 20.8% வளர்ச்சிப் பதிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 20.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி – ஒகஸ்ட் மாதங்களில் ஆடை ஏற்றுமதி ...

மேலும்..

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, கடன் வழங்குநர்கள் உதவுவார்கள் – சேமசிங்க

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB) மற்றும் இலங்கையின் கடன் வழங்குநர்கள் இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒக்டோபர் 10 முதல் 16 ...

மேலும்..

பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு

கடந்த செவ்வாய்கிழமை காலமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சந்தாகார மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன, ...

மேலும்..

வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு: கொழும்பு கிராண்ட்பாஸில் சம்பவம்

கொழும்பு கிராண்ட்பாஸ் செயின்ட் ஜோசப் வீதியில் வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிராண்ட்பாஸில் வசிக்கும் 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நேற்று இரவு முதியவர் ஒருவரை பராமரிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் ...

மேலும்..

Air France, Royal Dutch Airlines அடுத்த மாதம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றன

எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விமான நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளன. மேலும் ...

மேலும்..

இராஜகிரியவைச் சேர்ந்த கொள்ளையர்கள் இருவர் கைது!

இராஜகிரிய வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் சங்கிலி பறிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து தங்கச் ...

மேலும்..

பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் போது வயது குறைந்த பிள்ளைகளின் நலன்புரி ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை கட்டாயம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறும் போது 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வயது குறைந்த பிள்ளைகளின் நலன்புரி ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை கட்டாயம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் ஒக்டோபர் 31 காலாவதியாகின்றன

காலாவதியாகவுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலாவதியாகவிருக்கும் தடுப்பூசிகளின் தொகுப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும் ...

மேலும்..

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்; உயிர் தப்பிய சாரதி!..

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, மாவட்டபுரம் பகுதியில் பயணித்த வேன் ஒன்று நேற்று (21) இரவு தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது. வாகனம் தீப்பிடித்த போது சாரதி வாகனத்திலிருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை கடற்படைத் தளத்தின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தலையிட்டு தீயை அணைத்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறினால் ...

மேலும்..

மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!…

நாவலப்பிட்டி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எடண்டேவெல கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 58 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 5 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளியாப்பிட்டிய தியவளையிலிருந்து அருவ்பொல ...

மேலும்..

தொடர் மழையால் புளத்சிங்களவில் வெள்ளப்பெருக்கு!..

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக குடாகங்கை நிரம்பி வழிவதால் புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புளத்சிங்கள மொல்காவ பிரதான வீதியின் தம்பல, அட்டபாகஸ் சந்தி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்றிரவு நிலவரப்படி, குக்குலே கங்கையின் மேல் பகுதிகளில் ...

மேலும்..

சீரற்ற காலநிலை: 4,900க்கு மேற்பட்டோர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1,296 குடும்பங்களைச் சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 31 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ...

மேலும்..