Uncategorized

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி!

சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க ...

மேலும்..

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்! புதுக்காட்டு சந்தியில் கோரம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்! பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பளைப் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த பெயர்ப் பலகையில் மோதியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை ஏ9வீதி புதுக்காட்டுச்சந்தியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் 1990 ...

மேலும்..

ஒருமாத காலத்திற்குள் இலங்கையை சூழவுள்ள ஆபத்து!

இலங்கையின் பிரதான வைரஸ் பரவலாக டெல்டா வைரஸ் திரிபு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா வைரஸ் பரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு இதனை கூற முடியுமென விசேட வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் ...

மேலும்..

யாழின் அழகிய கடல் நீரேரி கச்சாய்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் அமைந்துள்ளது. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் கடல்நீரேரி ‘சேத்துக்கடல்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லமுடியும் . அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய ...

மேலும்..

தென்னிலங்கையில் புகழாரம் சூட்டப்பட்டு வருகின்ற நீதிபதி இவர்தானாம்!

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தென்னிலங்கையில் மீண்டும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற சமூகத்தில் மீண்டும் மீண்டும் பிரகாசிக்கப்படும் தமிழரான நீதிபதி இளஞ்செழியனின் மனிதநேயம் மாறியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகம் இளஞ்செயழின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மெய்பாதுகாவலரான சரத் ஹேமசந்திர ...

மேலும்..

நாட்டின் பெரும் சொத்து எம்மை விட்டு பிரிந்தது!

திரு. R. ராஜமகேந்திரன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள். கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் திரு. R. ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் புகழ்பூத்த தொழில்துறை குழுமத்தினை 1983ம் ஆண்டில் பொறுப்பேற்று பல்வேறுபட்ட இடர்காலங்களுக்கு மத்தியிலும் மிகச்சிறப்பாக கட்டியமைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவராக அவர் இந்நாட்டின் கௌரவத்துக்குரியவர். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக ...

மேலும்..

நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது!

கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண் எதிரே நிற்கும் இந்தச் சோக நாட்களில், ஜனநாயக வழியில் தமிழ் இனத்தின் விடுதலை எழுச்சியை வழி நடத்திச் செல்லக்கூடிய நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தொடர்பில் ...

மேலும்..

மகாராஜா நிறுவன உரிமையாளர் ராஜ மகேந்திரன் காலமானார்!

மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ,முகாமைத்துவ பணிப்பாளர் கிளி ராஜாமஹேந்திரன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார். இவர் சக்தி, சிரச , எம் .டி.வி ஆகிய ஊடகங்களை இலங்கையில் உருவாக்கி சுதந்திர ஊடகத்தின் பாதுகாப்பை வழி நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிய இவரது ...

மேலும்..

ஆரோக்கியமான மற்றும் பளீச் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்!

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்கான முயற்சியாக, இந்த ரசாயனமில்லாத இயற்கைப் பொருட்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தோல் வகைக்கும் இது பொருந்தும். இது எண்ணெய், உலர்ந்த, சாதாரண அல்லது உணர்திறன் கொண்டதாக சருமமாக இருக்கலாம். உங்கள் சருமத்தை குணப்படுத்தவும் இயற்கையாகவே அழகுபடுத்தவும் இயற்கையின் சக்தியை நீங்கள் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இல்லாதபோது, ​​உங்கள் அழகை ...

மேலும்..

வைத்தியசாலையில் ரிஷாட் பதியுதீனின் கேவலம் அம்பலம்! சிங்கள ஊடகம் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது செய்த இரகசிய நடவடிக்கையினை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், அதனை ஒரு தாளில் சுற்றி கழிப்பறையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு ...

மேலும்..

கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு!

கொரோனா நோய்த்தொற்றுகள் மீண்டும் உயர்வடைவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்தில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,056 ஆகும். இது கடந்த 17 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும். இதன்படி அதே நாளில் 1,452 பேரும், 18 ஆம் திகதி 1,420 பேரும், 19 ஆம் திகதி ...

மேலும்..

தமிழர்களின் ஒற்றுமை இன்மையே வடக்கில் சிங்களவர்கள் நியமனம் பெற காரணம்!

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா ...

மேலும்..

மொரட்டுவ பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம்!

மொரட்டுவ பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி ஒருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் 25 வயது மகனும், 42 வயது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியை காணவில்லை என அவரது பாட்டியால் ...

மேலும்..

நாடு முழுவதும் பலத்த காற்று வீசக்கூடும்!

எதிர்வம் நாட்களில் நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, ...

மேலும்..

விடுதலைப்புலிகள் வலுவடைய சிங்களவர்களே காரணம்!!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கருப்பு ஜுலை கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மேலும் வலுவடைந்ததாகவும், அத்தகைய தீவிரவாத இயக்கமொன்று எழுச்சியடைவதற்கான காரணம் சிங்களவர்களே தவிர தமிழர்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி ...

மேலும்..