February 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

தனியார் வைத்தியசாலைகளின் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பூசிகளை வழங்கப்பட்டு வருவதாக, ஆரம்ப சுகாதாரச் சேவைகள் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டுப் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றக்கூடிய, பிரதேச மட்டங்களில் உள்ள சிறிய அளவிலான ...

மேலும்..

ஜனாசா விடயம் தொடர்பில் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை

(பாறுக் ஷிஹான்) கொவிட் 19 காரணமாக முஸ்லிம்கள் மாத்திரம் மரணிக்கவில்லை. கிறிஸ்தவர்கள், தமிழர்கள் மற்றும் பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள். எனவே, பாராளுமன்றத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் ...

மேலும்..

கொவிட் 19 தொற்றிலிருந்து 865 பேர் குணமடைந்தனர்

கொவிட் 19 தொற்றிலிருந்து 865 பேர் இன்று(14) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,696 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா!

இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ளார். பாதிக்கப்பட்டவர் இலங்கை அரசாங்கத்தின் மருத்துவநிலையமொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களின் படி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தவர்களும் உரிய நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர் தூதரகத்தின் ...

மேலும்..

வடக்கின் தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை கூறும் விக்னேஸ்வரன்!

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை ...

மேலும்..

டெக் பந்தாட்ட (TEQ BALL)  விளையாட்டு மன்னாரில் ஆரம்பித்து வைப்பு!

விளையாட்டுத் துறை அமைச்சினால் இலங்கையின் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப் படுத்தப்பட்ட டெக் பந்தாட்ட (TEQ BALL)  விளையாட்டு இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் எழுச்சிப் பட்டறை நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான எழுச்சிப் பட்டறை நிகழ்வு (14)இன்றைய தினம் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் ...

மேலும்..

20க்கு வாக்களித்த மு.கா எம்.பிக்கள் பொது மன்னிப்பு கோர இணக்கம்: ரவூப் ஹக்கீம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர இணக்கம் வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று (13) சனிக்கிழமை ...

மேலும்..

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கு கொரோனா

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களில் 08 பேருக்க கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே குறித்த 08 பேர் தொற்றாளர்களாக ...

மேலும்..

வடக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மார்ச்சில் ஆரம்பம் – கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “108 மையங்களில் இந்த ...

மேலும்..

யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான்- சென்னையில் ஈழத் தமிழர்கள் பற்றி மோடி உரை!!

தமிழகத்தின் சென்னை மாநகருக்கு இன்று விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பற்றி உரையாற்றியுள்ளார். இதன்போது, இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசாங்கம் செய்த பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியதுடன் பல்வேறு உதவித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் ...

மேலும்..

ஆயிரம் அடி உயரத்தில் இரு பெரும் பாறைகள் இடையே கயிற்றைக் கட்டி நடந்து இளைஞர் சாதனை..!

ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயர்ந்த இரு பாறைகளுக்கு நடுவே கயிற்றினைக் கட்டி அதன்மீது நடந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ராயன் ராபின்சன் என்பவர் உயரமான இடங்களுக்கு நடுவே கயிற்றைக் கட்டி அதன் மீது நடந்து செல்வது வழக்கம். அதற்காக ஆஸ்திரேலியாவின் ...

மேலும்..

மட்டக்களப்பு-நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி பலி

(ந.குகதர்சன்)   வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் இன்று (14)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த சிறியரக வட்டா வாகனத்தின் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்குமாறு கோரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொரோனா ஒழிப்பு நிதியத்தில் இருந்து அதற்கான நிதியை பெற்றுக்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ...

மேலும்..

இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் 32 நாடுகளின் பிரதிநிதிகளிடம் சுமந்திரன் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில், இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம்  குறித்து உறுப்பு நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். மெய்நிகர் ஊடாக நடைபெற்ற  கலந்துரையாடலில் ...

மேலும்..

இரண்டு குழந்தைகளை துாக்கிய குரங்குகள் குளத்தில் வீசியதில் ஒரு சிசு பலி!

வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த, பிறந்து எட்டு நாட்களே ஆன, இரண்டு பச்சிளங் குழந்தைகளை குரங்குகள் துாக்கிச் சென்று குளத்தில் வீசியதில், ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்திய நாட்டில் உள்ள தஞ்சாவூர், மேலஅலங்கம், கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா, 29; பெயின்டர். இவரது ...

மேலும்..

தென்னாபிரிக்க வைரசும் இலங்கையில் பரவியிருக்கலாம்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

தென்னாபிரிக்க கொரோனா வைரசும் இலங்கைக்குள் நுழைந்திருக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க வைரசும் இலங்கையில் பரவிக்கொண்டிருக்கலாம் அது கண்டுபிடிக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பிரித்தானியா கொரோனா வைரஸ் பரவுவது இலங்கையில் கவலையளிக்கின்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் கைது

வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானின் உதவியாளரான மொஹமட் அஜ்மீ எனும் நபர் நபர் செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருடன் மேலும் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்களிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்று ...

மேலும்..

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு; 3,880 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதில் 494 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 16,894 அதிகாரிகள் மற்றும் 60 பொலிஸ் நாய்கள் ...

மேலும்..

போதியளவு நெல் உலரவிடும் தளம் இன்மையால் வீதியில் உலரவிடும் விவசாயிகள்-போக்குவரத்து செய்வதில் சிக்கல்..

(பாறுக் ஷிஹான்) நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை உலரவிடுவதற்காக பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை விவசாயிகள் பயன்படுத்துவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் 63,000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை ...

மேலும்..

மண்ணையும் பெண்ணையும் காப்போம் – மலையக பெண்களின் கவனயீர்ப்பு நிகழ்வு

(க.கிஷாந்தன்) கொரோனாவுக்கு மத்தியில் மண்ணையும் பெண்ணையும் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் மலையகப்பெண்களின் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று (14) இன்று காலை நடைபெற்றது. பெண்கள் பச்சை நிற ஆடை அணிந்து நூறு கோடி மக்களின் எழுச்சி, இயற்கை உணவுகள் உண்போம், ஆரோக்கியமான ...

மேலும்..

யாழில் ஒன்றுகூடிய அனைத்து தமிழ் கட்சிகள்!

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகளின் ...

மேலும்..

இலக்கியவாதிகள் ஐவருக்கு நினைவேந்தல் நிகழ்வு !

( நூருல் ஹுதா உமர்) இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இமயம் கலை மன்றம் மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் இணைந்து ஏற்பாடு செய்த மணிபுலவர் மருதூர் ஏ மஜீத், பன்னூலாசிரியர் நூறுல் ஹக், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, அதிபர் ஏ.கே.எம். நியாஸ், ...

மேலும்..

தமிழர்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகர செயற்படுகிறார்- கஜேந்திரன்

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாதென ...

மேலும்..

இலங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(பாறுக் ஷிஹான்) இலங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு  ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கடந்த 12.02.2021 ம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரச வேலைவாய்ப்பு அறிவித்தல்களில்  இப்பதவிக்கான  முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன் படி இலங்கைப் ...

மேலும்..

ஆரையம்பதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட   மக்களுக்கான  உலர்வுணவு  பொதிகள் வழங்கும் நிகழ்வு  நேற்று  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது . 2020  ஆம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ளணர்த்தத்தின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட  மட்டக்களப்பு  மாவட்ட   மக்களுக்கு சர்வதேச  லயன்ஸ் கழகத்தின் நிதி ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது-இராதாகிருஸ்ணன்

(க.கிஷாந்தன்)   எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது.   அப்படி அமைந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது – சிவஞானம் ஸ்ரீதரன்

தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது தமிழர்களே இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

பொலிஸாக இருந்திருந்தால் வடக்கில் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன்- மேர்வின்சில்வா

நான் மாத்திரம் பொலிஸாக இருந்திருந்தால், பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் மேர்வின் சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “பொன்னம்பலம் ...

மேலும்..