August 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முழுமையான தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு UAE வீசா…

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் UAE அறிவித்துள்ளது. இலங்கையர்களும் சுற்றுலா வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க ...

மேலும்..

சீனியை களஞ்சியப்படுத்தியிருந்த பல களஞ்சியங்களுக்கு சீல்…

நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் பல்லாயிரம் மெட்ரிக் தொன் சீனியை களஞ்சியப்படுத்தியிருந்த பல களஞ்சியங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. குறிப்பாக வத்தள, மாபோல களஞ்சியமொன்றில் 4,800 தொன் சீனி உள்ளிட்ட சீதுவை, பண்டாரகம உள்ளிட்ட கம்பஹா ...

மேலும்..

கொரோனா இடையே இலங்கை பௌத்த பிக்குகள் செய்த சாதனை.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதற்காக பௌத்த பிக்குகள் இணைந்து இலங்கையில் புதிய சாதனையொன்றை நிகழ்த்தி வருகின்றனர். உலகில் மிக நீண்டமாக பிரித் பிரார்த்தனை நூல் பயன்படுத்தப்படுவதே உலக சாதனையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் இன்றுவரை இதுஉலக சாதனைப் புத்தகத்தில் ...

மேலும்..

கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி.

கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 900 கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ...

மேலும்..

21 மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட முகக் கவசம்.

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை சிறப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேக்கு ...

மேலும்..

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு – அமைச்சரவை வழங்கிய அனுமதி…

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை  (30) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம்  (30) நடைபெற்ற போதே, இந்த அங்கீகாரம் ...

மேலும்..

மாநில செயற்குழு கூட்டம் – 29.08.2021-

தமிழ்நாடு மின்வாரிய மறுமலச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின்  மாநில செயற்குழு கூட்டம் 29.08.2021 அன்று சென்னை, தாயகத்தில் வைத்து, மாநில தலைவர் வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜீவன், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், ரவி மற்றும் துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ...

மேலும்..

இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டோக்கியோ பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் தனது பொறுப்பை நிறைவேற்றிய ...

மேலும்..

தாய்நாட்டுக்கு சர்வதேச புகழை ஈட்டித்தந்த ஈட்டி வீரனுக்கு கௌரமிகு வாழ்த்துக்கள் : ஹரீஸ் எம்.பி வாழ்த்து!

பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை இராணுவ வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளதுடன் டோக்கியோவில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தனது முதலாவது தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளது எனும் மகிழ்ச்சிகரமான செய்தி ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி;. சுகுணன் தலைமையில் சிறப்பாக இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பி இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேச சபையினால் கொரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாகை திறந்து வைப்பு !

அக்கரைப்பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கொரோனா பெரும் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாகைகள் காட்சிப்படுத்தும் செயற்திட்டம் இன்று (30) திங்கட்கிழமை  காலை அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக் தலைமையில் பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக முதல் ...

மேலும்..

வைகோவுடன், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு…

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அவர்கள், இன்று (30.08.2021), சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார். தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் ...

மேலும்..

வெளிநாட்டுத் தலையீட்டினூடாகவே இந்த நாட்டில் நிலையான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

கடந்த காலங்களிலே தமிழ் மக்களை ஏமாற்றிய விடயங்களை தற்போது ஐநா சபை அறிந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் ஐநா சபை அல்லது வெளிநாட்டுத் தலையீட்டினூடாகத் தான் இந்த நாட்டில் நிலையான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை.

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று தம்பிலுவில் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில்  மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணமூர்த்தி 55 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.00 மணியளவில் தனது ...

மேலும்..

இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு – மலையக மக்கள் ஆர்வம்!

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட ...

மேலும்..

சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டாவது தடுப்பூசி இன்று (30) முதல் ஆரம்பம்…

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அரிகாரி பிரிவிலும்  முதலாம்  தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று ...

மேலும்..

கல்முனை தெற்கில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம் ; பொது மக்கள் ஆர்வத்துட தடுப்பூசியினை பெற வருகை !

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப் படுத்தும் முகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பான முறையில்இடம்பெற்று வருகிறது ,இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கல்முனை தெற்கு சுகாதார வைத்தியஅதிகாரி ஏ. ஆர்.எம். அஸ்மி தலைமையில் இன்று (30) ஆரம்பமானது. இதனடிப்பையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்துசுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசியை இன்று (30)பெற்றுக் கொண்டனர். கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்   இன்று  தொடக்கம்  வரும் வியாழன் வரை (30/08/2021-02/09/2021) நான்கு நாட்களுக்கு (காலை 8.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை )  தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறவுள்ளதாக தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார் . இதன்படி கல்முனை பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை , அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் , அல் - பஹ்ரியா  தேசிய பாடசலை, கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்திலும் , மருதமுனை பகுதியில் அல் - மனார் மத்திய பாடசாலை , அல்- மதீனா வித்தியாலயத்திலும் பெரிய நீலாவனை பகுதியில் ஷரீப்புதீன் வித்தியாலயத்திலும் , நற்பிட்டிமுனை பகுதியில் அல்அக்ஸா மகாவித்தியாலயத்திலும் என கல்முனை தெற்கு  சுகாதார பிரிவில் 08 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் ஏற்பாடாகி, இடம்பெற்று வருகிறது . பொதுமக்கள் சிரமமின்றி இலகுவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முகமாக  தெற்கு சுகாதார பிரிவில் கிராமசேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட  குறித்த தினங்களில்  தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொதுசுகாதார பரிசோதகர்கள், தாதி உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவமறிந்த மக்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாம் தடுப்பூசியை பெற்றனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் இன்று முதல் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. சுகாதார திணைக்கள  வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், ...

மேலும்..

இலங்கையை உலகுக்கு காட்டியவர் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர்…

இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக, இலங்கையை உலகத்துக்குச் சொன்னவர்களுள் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எச்.அஸ்வர். அவரது 4ஆவது வருட நினைவு தினம் (30) இன்றாகும். அவர் மறைந்தாலும் அவரது காலத்தில் வாழ்ந்த நாங்கள் அவருக்காகச் செய்கின்ற கைம்மாறு, அவரது பணிகளை ஞாபகப்படுத்துவதும், ...

மேலும்..

செந்தில் தொண்டமான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும், செந்தில் தொண்டமான்  ஆகியோருக்கும் தொலைப்பேசியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில்,இந்தியாவில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு,உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில்,சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக ...

மேலும்..