முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன விடுதலை!

மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியபோது அரசாங்கத்துக்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கை தொடர முடியாது என சஜின் வாஸ் குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்து.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.