இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம் : சிங்கப்பூர் பிரதமருடனான ஜனாதிபதி ரணில் சந்திப்பு

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என  சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (27) டோக்கியோவில் சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ்  சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த  சந்திப்பின்  போது   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை  வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும்  எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர்  பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.