மீன்களின் விலையில் இன்று ஏற்பட்ட வீழ்ச்சி..!

நாட்டில் சிறிய ரக மீன் வகைகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெஹலியகொட மத்திய மீன் வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகளவில் மீன்கள் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளது என குறித்த வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயந்த விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.

 

மண்ணெண்ணை விநியோகம்

மீன்களின் விலையில் இன்று ஏற்பட்ட வீழ்ச்சி..! | Fish Price In Sri Lanka Fish Market

இதேவேளை, மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணை அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒரே தடவையில் மண்ணெண்ணை விநியோகம் செய்யப்பட்டது எனவும், எதிர்வரும் காலங்களில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு தடவையே மண்ணெண்ணை விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மண்ணெண்ணை பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக மண்ணெண்ணை விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கஹவத்த தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.