போராட்டத்தின் போது பொலிஸாரின் நடத்தைக்கு பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஒரு அறிக்கையில், ஒரு தாயும் குழந்தையும் பொலிஸாரினால் வன்முறையில் இழுத்துச் செல்லப்பட்டதை உலகம் திகிலுடன் கண்டதாகவும், கலவர நிலையில் முன்னேறிய பொலிஸாரிடமிருந்து ஒரு தந்தை தனது குழந்தையுடன் பின்வாங்குவதாகவும் அது தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நுட்பமானவை அல்ல, ஆனால் அப்பட்டமான ஜனநாயக விரோதமான ஒரு சர்வாதிகார ஆட்சியின் கடுமையான நினைவூட்டல் என அந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு, அரசின் இத்தகைய சட்ட விரோதமான மற்றும் மிருகத்தனமான செயல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.